நீ இருப்பது தெரியவில்லை
தேவலோகத்தில் சுயம்வரம்
அரசன் முன்னிலையில்
தேவலோக அழகிகள்!
வரிசையிலே
பார்வையாளராய்
நீ!
பாவம் அரசன்
நீ இருப்பது தெரியவில்லை
அவனுக்கு!
தேவலோகத்தில் சுயம்வரம்
அரசன் முன்னிலையில்
தேவலோக அழகிகள்!
வரிசையிலே
பார்வையாளராய்
நீ!
பாவம் அரசன்
நீ இருப்பது தெரியவில்லை
அவனுக்கு!
என் காதலுக்கு
அணிந்துரை எழுதிய
இறைவன்
முடிவுரை
தெரியாமல்
தடுமாறுகின்றான்
உனது முடிவு
எப்படி அமையுமென்று
அவனுக்கே தெரியாததால்!
உன்னைப்
பார்த்தேன்
உன்னில்
கலந்தேன்
என் காதலை
விண்ணப்பித்தேன்
காதலில்
ஜெயித்தேன்
உன்னோடு
ஐக்கியமானேன்
இரண்டறக்
கலந்தேன்
உன்னாலே
பிரிந்தேன்
உள்ளத்தால்
தவித்தேன்
முடிவற்றுக்
கிடந்தேன்
காதலில்
தோற்றேன்
வலியால்
துடித்தேன்
மாற்றான் மனைவியாக
கண்டேன்
இரண்டாக
உடைந்தேன்
என் காதலுக்கு
விடை தேடினேன்
எனக்கு முடிவுரை
எழுதினேன்
என்னை
அழித்தேன்
இறுதியில்
கல்லறையானேன்.
கனவுகள் சுமந்து பறந்த பட்டாம்பூச்சி ஒன்று தன் சிறகுகளை இழந்து மெளனமாய் இன்று மனசுக்குள் அழுவது என் செவியில் விழுகிறதே…….. !!! என் உயிரெல்லாம் பூக்கள் மலர கவிதைகள் எழுதிய ஜீவன் இன்று ஜன்னல் வழியே தூரத்து வானின் வெள்ளி நிலவிடம் பேசி மறுமொழி பேச ஆளில்லாமல் தனித்து துடிக்கிறதே….. !! உன் இதயத்தின் விசும்பல்கள் என் இதயம் அறியும்….! என் இதயத்தின் தவிப்புகளை உன் இதயம் அறியும்….! என்றாவது என்னை நீ சந்தித்தால் அழுதுவிடாதே உன் பிரிவை சுமக்கின்ற என் மெல்லிய இதயம் உன் கண்ணீரின் கனம் தாங்காமல் உடைந்துவிடக்கூடும்
SocialVibe