தொகுப்பு

Archive for the ‘அறிவியல்’ Category

இருதயத்தில் ஏற்படும் அடைப்பு குறித்த சில தகவல்கள்

இருதயம் நம் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியான ஒன்று. இருதயம் நன்றாக இயங்கினால் மட்டுமே நாம் வளமாக வாழ முடியும்.

இருதயமானது ஒரு தசையும், நாணும் இணைந்த ஒரு உறுப்பு, இதில் நான்கு அறைகள் உள்ளது.

இந்த நான்கு அறைகள் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடல் உறுப்புகளுக்கு அனுப்புகிறது. இதில் உள்ள இரத்த நாளங்களில் கொழுப்புப் படிந்து(Atherosclerosis) சிறியதாகும் பட்சத்தில் இருதயம் தனக்குத் தேவையான உணவு கிடைக்காமல் தவிக்கும். அந்தத் தவிப்பே நெஞ்சு வலியாக உருவெடுக்கிறது.

புகை பிடிப்பது இருதய இரத்தநாளங்களை தடிக்கச் செய்து அவை குறுகி விரியும் தன்மையையும் மிகவும் பாதிக்கும். கொழுப்பு படிவது நாளங்கள் எல்லாவற்றையும் பாதித்தாலும் ஓரிரு இடங்களில் மிகவும் குறுகும்(critical stenosis) பட்சத்தில் நெஞ்சுவலி அல்லது திடீரென்று இரத்த அடைப்பு ஏற்பட்டாலும் மாரடைப்பு (Heart attack/ Myocardial infarction) வருகிறது.

நாளங்களில் 50 சதவீதத்திற்கு மேலே அடைப்பு இருந்தாலே சிகிச்சை தேவை. அவற்றிற்கு குறைவாக இருந்தால் உணவு மற்றும் மருந்தினால் குணப்படுத்தலாம்.

உணவில் கொழுப்பு மற்றும் உப்பைக் குறைப்பது, நீரிழிவு நோய் இருந்தால் அதைக் கட்டுப்பாட்டில் வைப்பது, கொழுப்பை குறைக்க மருந்து சாப்பிட்டுவது, ஆரோக்கியமாக உடற்பயிற்சி செய்வது போன்றவை மிக முக்கியம்.

ஆக இரண்டிற்கும் மேற்பட்ட நாளங்களில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாகக் குறுகி இருந்தால் மருந்தாலும், உணவாலும் கட்டுப்படுத்துவது கடினம். குறுகிய நாளங்களை பைபாஸ் (Coronary Artery Bypass Graft (CABG)) சிகிச்சையோ, அஞ்சியோப்லாச்ட்டியோ(angioplasty) செய்து இரத்த ஓட்டத்தை மீண்டும் பெருகச் செய்ய வேண்டும்.

Categories: ALL POSTS, அறிவியல் குறிச்சொற்கள்:

கொட்டாவி

கொட்டாவி என்பது தன்னியல்பாக வாயைப் பெரிதாகத் திறந்து மூச்சுக் காற்றை வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் உள்ளிழுப்பதும், அதே வேளையில் செவிப்பறை விரிவடைவதும், பின்னர் நுரையீரலில் இருந்து பெருமூச்சாக வாய்வழியே காற்றை வெளிவிடுவிடுவதுமான செயலைக் குறிக்கும்.

ஒருவருடன் நாங்கள் உரையாடும் போது அந்த நபர் கொட்டாவி விட்டால் அவர் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்று நினைப்போம்.அவர் எங்களை அலட்சியப்படுத்துகிறார்  என்று எங்களுக்குள் எண்ணிக் கொள்வோம்.

ஆனால் உண்மை அதுவல்ல.அவர் எங்கள் பேச்சை உன்னிப்பாக அவதானிக்கிறார் என்பதே அர்த்தம்.எனவே இனி யாராவது கொட்டாவி விட்டால் மகிழ்ச்சியடையுங்கள்.

புதிய ஆய்வின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

 

Categories: ALL POSTS, அறிவியல் குறிச்சொற்கள்:

உடலில் சோர்வு ஏன் ஏற்படுகிறது?

சில நபர்கள் வெகு சீக்கிரமாக சோர்வடைந்து விடுவர். அதிக வேலைப்பளு, தூக்கமின்மை போன்ற காரணங்களால் சோர்வு ஏற்படுகிறது.

தூக்கமின்மை: குழந்தைகளுக்கு எட்டு முதல் பத்து மணி நேரமும், பெரியவர்களுக்கு ஆறு முதல் எட்டு மணி நேர தூக்கம் அவசியம்.

தூக்கத்தில் மூச்சுவிட மறத்தல்: இந்த நிலை மிகவும் குண்டான, புகை பழக்கம் உள்ளவர்களுக்கு வரும். உறக்கத்தில் அடிக்கடி மூச்சு நின்று நின்று வருவதால் இவர்கள் நாள் முழுதும் சோர்வாகவே இருப்பார்கள். எட்டு மணி நேரம் தூங்கினாலும் இரண்டு மணி நேரம் தூங்கிய உணர்வே இருக்கும்.

மாறுபட்ட உணவு: காலை உணவு சாப்பிடாமல் இருத்தல், சரிவிகித உணவு உண்ணாமை, நேரம் தவறி சாப்பிடுதல், அதிகபடியான அசைவ உணவு, உணவு அலர்ஜி இதற்கு மருத்துவம் கட்டாய காலை உணவு, பழங்கள், அளவுடன் அசைவம், அலர்ஜி உள்ள உணவை தவிர்த்தல்.

ரத்த சோகை: பெண்களுக்கு, குழந்தைகளின் சோர்வுக்கு மிக முக்கிய காரணம் இதற்கு இரும்புச் சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும்.

தேநீர்: கொஞ்சம் கொஞ்சமாக நிறைய தடவை குடிக்கும் தேநீர் ரீ போன்றவை முதலில் ஒரு தற்காலிக உற்சாகம் தந்து பின் இறுதியில் சோர்வையே தரும்.

நீரிழிவு நோய்: 35 வயதை கடந்தாலே இதுவும் ஒரு சோர்வுக்கு ஒரு காரணம்.

உடலில் நீர், உப்பு பற்றாகுறை: போதிய அளவில் நீர் குடிக்காமல் இருப்பது மற்றும் வியர்வையில் நீர், உப்பு இழப்பு இதற்குரிய மருத்துவம். ஒரு நாளைக்கு 3 லிட்டர் நீர் குடித்து வர வேண்டும்.

 

உடல் உறுப்புகளை சுறுசுறுப்பாக்கும் குங்குமப்பூ

குங்குமப்பூவில் உள்ள மூலப்பொருள்கள் மூளை உள்பட உடல் உறுப்புகள் அனைத்தையும் சுறுசுறுப்பாக்குவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

குங்குமப்பூவுக்கு பல மருத்துவ குணங்கள் இருப்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கனடாவின் அல்பர்ட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சிரிஸ் போவர் தலைமையில் இதுதொடர்பான ஆய்வு சமீபத்தில் நடந்தது.

உடல் உறுப்புகள் குறிப்பாக மூளையின் செயல்பாட்டை குங்குமப்பூ துரிதப்படுத்துவது ஆய்வில் தெரியவந்துள்ளது. குங்குமப்பூவில் உள்ள பொருள்கள் மூளையில் உள்ள செல்கள் பாதிப்படையாமல் பாதுகாப்பதால் மூளை செயல்பாடு அதிகரிப்பதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இதனால் நரம்பு மண்டலமும் வலுவடையும் என்கின்றனர். இதுபற்றி அவர்கள் மேலும் கூறுகையில், மூளை செல்கள் பாதிப்படைவதால் ஏற்படும் நிலை மைலின் எனப்படுகிறது. இந்த நிலையில் நரம்புகளைச் சுற்றி ஒரு மெல்லிய திரை போன்ற கவசம் உருவாகும்.

இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். வில் உள்ள பொருள்கள் இந்த திரை போன்ற கவசம் உருவாகாமல் தடுக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு குங்குமப்பூ கலந்த மருந்து கொடுக்கும்போது, பாதிப்பில் இருந்து அவர்கள் விடுபட முடிகிறது. மூளை செல்களை குங்குமப்பூ பாதுகாக்கிறது. நரம்பு மண்டலத்துக்கும் வலு சேர்க்கிறது என்றனர்.

Categories: ALL POSTS, அறிவியல் குறிச்சொற்கள்:

20 நொடிகளில் கண்ணின் நிறத்தை மாற்றலாம்

 20 நொடியில் லேசர் சிகிச்சையின் மூலம் கண்ணின் நிறத்தை மாற்றிக் கொள்ள முடியும் என அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின் ஸ்டிரோமா கண் ஆராய்ச்சி மைய நிபுணர் க்ரேக் ஹோமர் தலைமையில் தீவிர ஆய்வு நடத்தி இதை கண்டுபிடித்திருக்கின்றனர்.இதுபற்றி கிரேக் கூறுகையில், லேசர் மூலம் 20 நொடியில் கண்ணின் பிக்மென்ட்(நிறமிகள்) நிறம் மாற்றப்படுகின்றன. இப்போதைக்கு கண்ணை பிரவுன் நீல நிறத்துக்கு மாற்ற முடியும். மற்ற கலர்களை கொண்டு வருவது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது.

விரைவில் அதுவும் சாத்தியம் ஆகும். முழுக்க முழுக்க கணணி உதவியுடன் இந்த சிகிச்சை நடக்கிறது என்றார்.

நாள்தோறும் பால் அருந்தினால் பார்வை குறைபாடு ஏற்படாது

நியூயார்க் நகரில் அமைந்துள்ள பவலோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஏமி மில்லன் என்பவர் தலைமையில் வயது தொடர்பான பார்வை குறைபாடு பற்றி ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

பெரும்பாலும் 50 வயதினை நெருங்கும் பெண்களை பாதிக்கும் இக்குறைபாடு சாதாரணமாக செய்யும் வேலைகளான வாசித்தல், வாகனம் ஓட்டுதல் மற்றும் தெரிந்தவர்களின் முகத்தை அடையாளம் காணுதல் போன்றவற்றை கூட செய்ய இயலாத நிலைக்கு அவர்களை தள்ளி விடுகிறது.

பிரிட்டனில் வருடத்திற்கு ஏறத்தாழ 2 லட்சம் பேர் இக்குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 1313 பெண்களிடம் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் டி வைட்டமின் அதிகம் நிறைந்த உணவை உட்கொள்வோர் மற்றும் உடலில் டி வைட்டமின் அளவு அதிகமாக உள்ளோர் ஆகியோரிடம் இக்குறைபாடு அதிகமாக காணப்படவில்லை என்பது தெரியவந்தது.

குறிப்பாக பால் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட வெண்ணெய் மற்றும் தானியம் ஆகியவற்றை அதிகம் எடுத்து கொள்வது நன்மை பயக்கிறது. சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடுவதும் நன்மையையே தருகிறது. ஏனெனில் வைட்டமின் டி உற்பத்தியில் தோல் முக்கிய பணியாற்றுகிறது.

எனவே பால் மற்றும் அதிலிருந்து பெறப்படும் வெண்ணெய் போன்ற உணவு பொருள்களை பயன்படுத்துவது இக்குறைபாட்டை தவிர்க்க பெரிதும் உதவுகிறது என அந்த ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும் மீனில் இருந்து பெறப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு பயன் தரும் என்பதும் முன்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories: ALL POSTS, அறிவியல், மருத்துவம் குறிச்சொற்கள்:

வெள்ளைப்பூண்டின் மருத்துவ குணங்கள்

அல்லியம் சடைவம் என்பது இதன் அறிவியல் பெயர். இதை உடைத்தால் சிறுசிறு பற்கள் போன்ற பகுதிகள் வெளிவரும்.

இதை நசுக்கினால் ஒரு வாசம் வரும். இதுதான் மருந்து தயாரிக்க மிகவும் உதவி புரிகிறது. இது நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தயாரிக்க பயன்படுகிறது.

ஜீரணக்கோளாறுகளை பூண்டு நன்றாக குணப்படுத்திவிடும். பூண்டு பற்களை நேராகவோ அல்லது கேப்சூல் மற்றும் மாத்திரைகளாகவோ பயன்படுத்தலாம்.

இதன் எண்ணெயை கேப்சூலாக்கி கார்லிக் பெர்ல் என்ற பெயரில் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. குடல் பூச்சிகளை வெளியேற்றுகிறது. மார்பு வலி மற்றும் மூச்சுக்குழல் அழற்சிக்கு சிறந்த மருந்து இது.

சளி, ப்ளூ காய்ச்சல், காது வலிக்கும் பயன்படுகிறது. ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் சீனியின் அளவைக் குறைக்க பயன்படுகிறது.

தினமும் பழச்சாறு அருந்தினால் புற்றுநோய் ஏற்படும்

தினமும் காலையில் எழுந்ததும் பழச்சாறு குடிப்பது உடல் நலத்துக்கு நல்லது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.

தற்போது இது உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்று ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. தினசரி பழச்சாறு சாப்பிடும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் பழச்சாறு சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து ஏற்படுவது தெரியவந்தது. அதில் உள்ள சர்க்கரை புற்றுநோயை உருவாக்குவது கண்டறியப்பட்டது.

குறிப்பாக டப்பாக்களிலும், பாக்கெட்டுகளிலும் அடைக்கப்படும் பழச்சாறுகளில் அவை கெட்டுப்போகாமல் இருக்க பல மூலப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

அவை குடல் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன. நாள் ஒன்றுக்கு 3 டம்ளருக்கு மேல் குடிப்பவர்களுக்கு இது போன்ற புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Categories: ALL POSTS, அறிவியல் குறிச்சொற்கள்:

அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது

இரவில் முன் கூட்டியே தூங்க சென்று அதிகாலையில் கண் விழிப்பது உடல் நலத்துக்கு நல்லது.

அவர்கள் சொல்வாக்கு மற்றும் செல்வாக்குடன் திகழ்வார்கள் என கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்னரே பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அறிஞர் தெரிவித்து இருந்தார். அது முற்றிலும் உண்மை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கிலாந்தில் உள்ள ரோம்ப்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக சுமார் 1100 ஆண்கள் மற்றும் பெண்களை தேர்ந்தெடுத்தனர்.

அவர்களில் அதிகாலையிலேயே எழுபவர்கள் ஒல்லியாகவும், நல்ல உடல் நலத்துடனும் இருந்தனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

அதே நேரத்தில் ஆந்தை போன்று இரவு முழுவதும் கண் விழித்து விட்டு மிகவும் தாமதமாக படுக்கையை விட்டு எழுபவர்கள் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் தொலைத்தவர்களாக இருந்தனர்.

எனவே அதிகாலையிலேயே எழுந்து வழக்கமான தங்கள் பணிகளை தொடங்குபவர்கள் உடல் நலத்துடன் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories: ALL POSTS, அறிவியல் குறிச்சொற்கள்:

இயற்கை முறை மூலம் சில நோய்களுக்கான தீர்வுகள்

நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்களிலேயே பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.

உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால் ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.

வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால் முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.

ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. அதற்கு துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து அந்த நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.

தொண்டைப் புண் பாதிப்பு குணமான பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் அந்த பாதிப்பு முற்றிலும் குணமாகும்.

அஜீரணம் மற்றும் மந்தத்திற்குச் சிறந்தது கொய்யாவின் கொழுந்து இலை. அதனை சாப்பிட்ட உடனேயே பலனை எதிர்பார்க்கலாம்.

 

Categories: ALL POSTS, அறிவியல் குறிச்சொற்கள்:,
Follow

Get every new post delivered to your Inbox.

Join 27 other followers