நம்பர் 1 என்று இந்தியாவை அழைக்க முடியாது-கங்கூலி

gangulyஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் சௌரவ் கங்கூலி இந்தியாவை நம்பர் 1 அணி என்று அதற்குள் அழைக்கமுடியாது என்று கூறியுள்ளார்.தென் ஆப்பிரிக்க அணி போல் உள் நாடு, அயல் நாடு ஆகிய இரண்டு இடங்களிலும் வெற்றி வாகை சூடினால் மட்டுமே இந்தியாவை நம்பர் 1 என்று அழைக்க முடியும்,என்று தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் சௌரவ் கங்கூலி தெரிவித்துள்ளார்.

“இந்தியாவிடம் அருமையான அணி உள்ளது. ஆனால் அயல் நாடுகளில்தான் இந்த அணிக்கு உண்மையான சோதனை காத்திருக்கிறது, கடந்த ஆண்டை எடுத்துக் கொண்டால் இந்தியா ஏறக்குறைய உள் நாட்டில்தான் அதிக போட்டிகளை விளையாடியுள்ளது.

ஆஸ்ட்ரேலியா கடந்த சில மாதங்களாக தோல்விகளை தழுவி வந்தாலும் அவர்களுக்கும் மற்ற அணிகளுக்கும் தரவரிசைப் புள்ளிகளைல் கணிசமான இடைவெளி உள்ளது. தென் ஆப்பிரிக்க அணி சிட்னி டெஸ்டையும் வென்று தரவரிசையில் முதன் முதலாக முதலிடத்தை பெற வாய்ப்புள்ளது” என்று கூறினார் கங்கூலி.

ஆனால் இந்திய கிரிக்கெட் சமீப காலமாக வசதிகள் உள்ளிட்ட விஷயங்களில் பெருமளவு முன்னேற்றம் கண்டுள்ளது. உதாரணமாக நாக்பூரில் டெஸ்ட் கிரிக்கெட் நடைபெறுவது என்பது வசதிகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தினால்தான் என்று கூறியுள்ளார் கங்கூலி.

இந்த இடுகைக்கு பதிலிடவும்